வீட்டில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்?

Report Print Jayapradha in ஆன்மீகம்

விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

விளக்கேற்றும் திசைகள்
 • வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குத்திசைகளில் விளக்கு ஏற்றினால் சகல சம்பத்தும் கிடைக்கும், செல்வம் சேரும் மற்றும் கடன்கள் தீரும். மேலும் தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது
விளக்கேற்றும் எண்ணெய்
 • பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், முக்கூட்டு எண்ணெய் ஆகிய எண்ணெய்களில் ஏற்றலாம்.
 • பசுநெய்யுடன் நல்ணெணெய் கலப்பதும் தவறானது.எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.
திரிகளும் அதன் பயன்களும்
 • பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வீட்டில் மங்களம் நிலைக்கும். வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி மனச் சாந்தி உண்டாகும். புத்திரபேறு உண்டாகும்.
 • தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும்.
 • புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும். சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
 • வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள்
 • சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
 • ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .
 • ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும். கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும்.
 • மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும். இன்பங்கள் வந்து சேரும். பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers