செய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்

Report Print Jayapradha in ஆன்மீகம்
249Shares
249Shares
lankasrimarket.com

ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவது அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்.

இத்தகைய செய்வினை பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவர செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.

பரிகாரம்
  • குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
  • ஒரு சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய் 9, நாட்டு வாழைப்பழம் 18, கொட்டைப்பாக்கு18, வெற்றிலை 18, கதம்பப்பூ ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.
  • 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து அந்த சாறை உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றினால் செய்வினை உங்களை பாதிக்காது. பின் அந்த எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவினால் செய்வினை பறதோடிவிடும்.
  • யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்