வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருப்பது எப்படி?

Report Print Jayapradha in ஆன்மீகம்
372Shares
372Shares
lankasrimarket.com

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெற்று வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.

விரதம் இருக்கும் முறை
  • விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மா இலை தோரணம் கட்ட வேண்டும் பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும்.
  • அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்குமுகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
  • விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  • சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
  • பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும். விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
  • மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார்.
நன்மைகள்
  • விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
  • விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும்.
  • வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்