விநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும் தெரியுமா

Report Print Deepthi Deepthi in ஆன்மீகம்

நம் வீட்டில் எந்த சுபகாரியத்தினை ஆரம்பித்தாலும் முதலில் விநாயகரை வணங்கிதான் தொடங்குவோம்.

அதிலும் விநாயகருக்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பானது. அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் வீட்டில் ஹால் அல்லது பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம்.

விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும்.

விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.

விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.

தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும்.

கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.

உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும். வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.

வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments