செல்வச் செழிப்பை அள்ளி தரும் அஷ்ட லட்சுமிகளின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!

Report Print Jayapradha in ஆன்மீகம்

எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால் நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும் என்பது அனைவரின் நம்பிக்கை.

மேலும் எட்டு லட்சுமிகளின் அருளைப் பெற ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன. அதை கூறி வழிபட்டாலே அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம் பெற முடியும்.

ஆதிலட்சுமி

மகாவிஷ்ணுவின் இடப்பாகத்திலிருந்து தோன்றியவள் ஆதிலட்சுமி. எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஆதிலட்சுமியை வணங்கித் தொடங்கினால் அந்தக் காரியம் நிச்சயம் முழு வெற்றியை அளிக்கும்.

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்தித நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்ற மாந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தது நடக்கும்.

கஜலட்சுமி

மனித மூளையில் இடம் கொண்டு அறிவுக்கும், வளர்ச்சிக்கும் காரணமாகி பெருமை சேர்ப்பவள் தான் கஜலட்சுமி.

யா தேவி ஸர்வ பூதேஷூதயா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என சொல்லி வர வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

சந்தான லட்சுமி

குழந்தைப்பேறு அருளும் திருமகளாகவும் சிறந்த மணவாழ்க்கை அமைய உதவி செய்பவளாய் இருப்பவள் சந்தான லட்சுமி.

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்ற மந்திரத்தை சொன்னால் வாழ்க்கை எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கும்.

தான்ய லட்சுமி

வாழ்க்கைக்கு உணவுதான் முக்கியம். உணவுக்கு ஆதாரமாக இருப்பது தானியம். அந்தத் தானியம் வாழ்க்கையில் குறைவாரா கிடைத்துக் கொண்டே இருக்க தானிய லட்சுமியை வழிபட வேண்டும்.

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்பதை தினமும் சொல்வபருக்கு உணவுக்கு பிரச்சனை இல்லாமல் இருப்பார்கள்.

வீர லட்சுமி

ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் மன உறுதியையும், துணிச்சலையும் வீரத்தையும் பெற வீரலட்சுமியை தினமும் தவறாது வழிபட வேண்டும். எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால் தைரிய லட்சுமியின் அருள் வேண்டும்.

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்ற மாந்திரத்தை சொல்லும் பொழுது மனதில் ஒரு தைரியம் தோன்றும்.

தன லட்சுமி

மனிதனின் வலது உள்ளங்கையில் எழுந்தருளி வரவாகத் திகழ்கிறாள். இடது உள்ளங்கையில் எழுந்தருளி செலவாகத் திகழ்கிறாள். மொத்தத்தில் மனிதனை மகிழ்ச்சிப்படுத்தி உயிரினங்களுக்கு செழிப்பினைத் தருபவள்.

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்ற மாந்திரத்தை தினமும் சொல்லினால் வீட்டில் செல்வம் குறையாது.

விஜயலட்சுமி

கோவிலில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள் விஜயலட்சுமி. அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் சர்வ மங்கள என்னும் நாமம் பெற்ற நாராயணி ஆவாள்.

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்ற மந்திரத்தை சொன்னால் வெற்றிகள் வந்து சேரும்.

வித்யா லட்சுமி

கல்விச் செல்வத்தை வழங்குவதால் வித்யா லட்சுமி என்று பெயர் பெற்றவள். கலை, அறிவு, ஞானம் இவற்றை அருள்பவள்.

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்ற மாந்திரத்தை சொல்லி வர வாழிக்கை செழிப்பாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்