உங்களை ஜென்ம சனி ஆட்டிப்படைக்கின்றதா? இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது “ஜென்ம லக்னம்” ஆகிய “ஒன்றாம்” வீட்டில் பெயர்ச்சி ஆவதை “ஜென்ம சனி” என்பார்கள்.

ஜென்ம சனி காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம லக்னத்திலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வார்.

ஜென்ம சனி நடைபெறும் காலத்தில் சனி பகவானால் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை சனி பகவானின் அருளால் அதிகம் பெறுவதற்கு

இந்த ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, உடல் மற்றும் மன ரீதியான அசதி போன்றவை ஏற்படும்.

தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கு சிறந்த எளிய பரிகார முறையை பார்ப்போம்.

  • வாரத்தில் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, “அனுமன் சாலிசா” மற்றும் சனி பகவானுக்குரிய மூல மந்திரங்களை துதித்து வழிபடுவது நல்லது.
  • புதன்கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபட்டு வர உடல்சார்ந்த துன்பங்கள் இக்காலங்களில் ஏற்படாமல் காக்கும்.
  • கோவில்களுக்கு சென்று தீப எண்ணையை தானமாக வழங்கி வரலாம்.
  • மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஒரு வேளை உணவு உண்ணாமல் சனி பகவானுக்கு விரதம் இருந்து,கோவிலுக்கு சென்று சனி பகவானின் விக்கிரகத்தின் அடியில் கருப்பு எள் கலந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.
  • துப்புரவு தொழிலாளிகள், கீழ்மட்ட நிலை பணியாளர்கள் போன்றோரிடம் மரியாதையுடன் நடந்து, அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லாசிகள் உங்களுக்கு கிடைக்க செய்யும்.
  • ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
  • வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.
  • ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

குறிப்பு - சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...