சூரிய பகவான் இன்று எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்க போகிறார் தெரியுமா?

Report Print Jayapradha in ஆன்மீகம்

சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் இன்று சூரிய பகவான் இன்று எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.

மேஷம்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரின் அறிமுகத்தினால் லாபங்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் பணிகளை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்

பெற்றோருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். தொழிலில் புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்

தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பெற்றாவது தொழிலை அபிவிருத்தி செய்கின்ற பொழுது, சிந்தித்து முடிவு எடுங்கள்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்

வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். உடல் நிலையைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்

ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும்.புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட விவகாரங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

எந்த செயல்களைச் செய்தாலும் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு

எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களின் மூலமாக தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்

நீண்ட நாட்களாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் விரும்பிய இட மாற்றங்களால் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்

தொழிலில் தொடர்நது இருந்து வருகின்ற சில இன்னல்களைக் கடந்து வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சளி நிறமும் இருக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers