உங்களுக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என்பதை கண்டு பிடிப்பது எப்படி?

Report Print Jayapradha in ஆன்மீகம்
1447Shares

ஒருவருக்கு செய்வினை வைத்தால் அடுத்த நொடியிலிருந்து காரணங்கள் புரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக பாதிப்புகள் ஏற்படும்.

அப்படி நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

செய்வினை இருப்பதன் அறிகுறிகள்

  • நம் அருகில் யாருமே இருக்காத போது, அருகில் யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு மற்றும் யாரோ தன்னை தொடுவது போல் உணர்வது போன்று இருக்கும்.

  • நாம் வைத்த ஒரு பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பதால் பல குழப்பங்கள் உண்டாகும்.

  • நன்றாக சென்று கொண்டிருந்த உங்களது வேலையில் அல்லது சுயதொழிலில் காரணங்கள் இல்லாமலே திடீரென தொடர் தோல்விகள் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்பட்டு, அதிக பணத்தை இழக்கக்கூடும்.

  • உடலில் எப்போதும் பல நோய்கள் ஏற்பட்டவாரு இருக்கும். அது எந்த நோய் என மருத்துவர்களாலே கண்டுபிடிக்க முடியாது.

  • தினமும் உறங்கு போது கெட்ட கனவுகள் வரும். அதனால் நடு இரவில் உறக்கம் கலைந்து பயம் உணர்வுகள் அதிகமாகும்.

  • உணவில் சிறு முடிகள் காணப்படுவது போல் ஒரு உணர்வு இருக்கும். அலறி போய் வேறு சாப்பாடு எடுத்து வந்தாலும், அந்த உணவிலும் சிறிய முடி ஆங்காங்கே காணப்படுவது போன்று இருக்கும்.

  • கணவன், மனைவி மற்றும் உறவினர்களை இழந்து தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

செய்வினை வைத்துள்ளதை உறுதி செய்வது எப்படி?

  • ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு பார்க்கும் போது, தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போகும்.

  • துர்கா தேவிக்கு மாலையாக போட்ட எலுமிச்சையை எடுத்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்து 1 வாரம் கழித்து பார்க்கும் போது அந்த எலுமிச்சை பழம் அழுகி இருந்தால் தீய சக்தி உள்ளது என்று அர்த்தம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்