உங்களின் சாபங்கள் நீங்க வேண்டுமா?

Report Print Jayapradha in ஆன்மீகம்

ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு. நமது ஜாதகப்படி ஆராய்ந்து பார்த்து எந்த விதமான சாபம் உள்ளதோ அதற்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சாபங்கள் நீங்க என்ன செய்ய் வேண்டும்?
  • ஒருசிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது.அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர்.
  • ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒருசிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர்.
  • கற்றறிந்த பெரியவர்கள், வயோதிகர்கள் விடும் சாபம் சிலரை பாதிக்கலாம். எனவே தான் பிறர் கோபப்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள்.
  • அங்ஙனம் ஏற்படும் சாபங்கள் விலக இறை வழிபாடுதான் தீர்வு. தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும்.
  • தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும். சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
  • சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers