மலையேறும் போது சபரிமலை பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

Report Print Kavitha in ஆன்மீகம்

சபரிமலை செல்லும் போது நிதானமாக மலை ஏறவேண்டும் என்று பக்தர்களுக்கு தேவசம்போர்டும், சுகாதாரத்துறையும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐந்து கி.மீ. துாரம் நடக்க வேண்டும். இதில் மூன்று கி.மீ. செங்குத்தான மலை. இரண்டு கி.மீ. சாதாரண பாதை. நீலிமலையும், அப்பாச்சிமேடும் பக்தர்களை மூச்சுவாங்க வைக்கும். இதனால் ஆங்காங்கே ஆக்சிஜன் பார்லர்களும், முதலுதவி மையங்களும், ஆஸ்பத்திரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பை தவிர்த்து கொள்ளலாம்.

இருமுடியில் தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு வரவேண்டும்.

மலை ஏறும் போது வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. பொறுமையாக ஏற வேண்டும்.

ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் சற்று நேரம் நின்று இளைப்பாறிய பின்னர் பயணம் செய்ய வேண்டும்.

வேகமாக ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒரு கெடு நிர்ணயித்து இத்தனை நேரத்துக்குள் மலையேற வேண்டும் என்று செல்லக்கூடாது.

மலை ஏறும் போது அசாதாரண நிலை உணர்ந்தால் பக்கத்தில் உள்ள முதலுதவி மையம் அல்லது ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

தற்போது பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் குப்பி பாட்டில் அல்லது தரமான பிளாஸ்டிக் பாட்டில் கையில் கொண்டு வரவேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும் குழாய்களில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மலையேறும் போது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் அறிவிறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பு - மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்டிப்பாக டாக்டர்கள் அனுமதி பெற்றே பயணம் செய்ய வேண்டும்.

எவ்விதமான நோய்க்கும் நீண்ட நாட்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருபவர்கள் சபரிமலை பயணம் புறப்படும் முன்னர் டாக்டர்களை கலந்து ஆலோசித்து மருந்துகள் வாங்கி வரவேண்டும். மருந்து சாப்பிடுவதை நிறுத்த கூடாது.

டாக்டர்கள் அறிவுரையை மீறி மலையேற முயற்சிக்க கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers