தமிழ்க்கடவுள் முருகனின் வேல் பற்றி வெளிநாட்டு பெண் கூறும் ஆச்சர்ய தகவல்கள்

Report Print Vijay Amburore in ஆன்மீகம்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் வேல் பற்றிய ஆச்சர்ய தகவல்களை வெளிநாட்டு பெண் ஒருவர் கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வேல் என்பது தமிழ்க்கடவுள் முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும். பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.

புராணங்களின் படி பார்வதி, தனது சக்தி முழுவதையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதனைத் தன் மகனான முருகனுக்கு அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காக வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடிஅகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

அதேபோல முருகனின் வேலிற்கும் விந்தணுவிற்கும் உள்ள விஞ்ஞான தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தைகைய பல மகிமைகளை கொண்ட வேல் பற்றி, தமிழர்கள் அனைவரும் மறந்து வரும் வேளையில் வெளிநாட்டு பெண் ஒருவர், அதனை பற்றிய ஆச்சர்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசும் வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், வேலை எப்பொழுதும் நம்முடனே வைத்திருப்பதால், எதிர்மறையான சூழலை எளிதில் கடந்துவிட முடியும் என அவர் கூறுகிறார்.

ஆண்கள், மற்றும் பெண்கள் எப்பொழுதும் அதனை தங்களுடைய பர்சில் வைத்திருப்பது மிகுந்த பயனை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers