மகாலட்சுமி வீட்டில் நிரந்தர வாசம் செய்ய வேண்டும்? இந்த சங்கு ஒன்று போதுமே!

Report Print Kavitha in ஆன்மீகம்

சங்குகளில் வலம்புரி சங்குக்கு என்றே தனி மகத்துவமே உள்ளது.

வலம்புரிச் சங்கு இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது.

இடம்புரி, வலம்புரிச் சங்குகளானது வெண் சங்கு என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. இதில் வலம்புரிச் சங்குகளில் ஒரு அரிய வகையாக கூறப்படுகின்றது.

இந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடையே உள்ளது.

அந்தவகையில் வலம்புரி சங்கை வைத்திருப்பதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
  • ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.
  • பவுர்ணமி தோறும் வலம்புரிச் சங்குக்கு, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டாலும் கடன் பிரச்சினை அகலும்.
  • சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு கொண்டு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது. நாம் வழிபடும் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால், 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.
  • பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும். பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்படாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers