12 ராசிக்காரர்களும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும்? இந்த வழிபாடுகளை செய்தாலே போதும்

Report Print Kavitha in ஆன்மீகம்

12 ராசிகளுக்கும் வருடம் முழுவதும் வசந்த காலமாக மாற செய்ய வேண்டிய வழிபாட்டை அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வாருங்கள். கணபதி கவசம் பாடி வழிபட்டால் மன அமைதியும் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.

ரிஷபம்

வடக்குப்பார்த்த விநாயகரையும், வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். அனுமன் கவசம் பாடி வழிபட்டால் பணியில் ஏற்பட்ட தொய்வும் அகலும். பணவரவும் திருப்தி தரும்.

மிதுனம்

புதன்கிழமை தோறும் மகாலட்சமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எட்டுவகை லட்சுமிக்குரிய சமயமாலை படித்து வழிபடுவதன் மூலம் தனவரவு திருப்தி தரும். சந்தோஷமும் வந்து சேரும்.

கடகம்

திங்கட்கிழமை தோறும் தையல் நாயகி பதிகம் படித்து, வைத்தீஸ்வரர் - தையல்நாயகி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். பவுர்ணமி தோறும் மலை வலம் வருவதன் மூலம் மகத்துவம் கிடைக்கும்.

சிம்மம்

சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்து தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவது நல்லது. குரு கவசம் பாடி குரு வழிபாட்டையும் மேற்கொண்டால் குதூகலமான வாழ்க்கை அமையும்.

கன்னி

பிரதோஷ நேரத்தில் விரதமிருந்து நந்தியெம்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. நாககவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபடுவதன் மூலம் தேக நலனும் சீராகும், திடீர் திருப்பங்களும் ஏற்படும்.

துலாம்

வெள்ளிக்கிழமை தோறும் அஷ்டலட்சுமி கவசம் பாடி இல்லத்தில் லட்சுமி பூஜை செய்து வருவது நல்லது. பஞ்சமி திதியன்று வாராஹி வழிபாடு செய்தால், வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.

விருச்சிகம்

செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் விநாயப் பெருமான் வழிபாடும், வியாழக் கிழமை அன்று குரு வழிபாடும் செய்வது நல்லது.

ராகு-கேது-களுக்குரிய நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு, நாக கவசமும் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

தனுசு

செல்வ வளம்பெருக சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. அனுமன் கவசம் பாடி வழிபடுவதோடு வெற்றிலை மாலையும் சூட்டலாம்.

திசைமாறிய குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும்.

மகரம்

வெள்ளிக்கிழமை தோறும் விநாயகர் கவசம் பாடி சர்ப்ப விநாயகரை வழிபடுவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும்.

கும்பம்

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது. ஏகாதசி நன்னாளில் திருமகள் கவசம் பாடி வழிபடுவதன் மூலம் விஷ்ணு, லட்சுமி அருளுக்கு பாத்திரமாகலாம்.

மீனம்

செல்வ வளம்பெருக சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வியாழன் தோறும் குரு வழிபாடும் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களுக் குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

- Maalai Malar

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers