ஆன்மீகப்படி நவகிரகங்களை எப்படி வலம் வர வேண்டும்?

Report Print Kavitha in ஆன்மீகம்

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.

நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான காலம் முதல் இன்று வரை நீடித்து வருகின்றது.

நம்மில் சிலருக்கு நவகிரகங்களை எப்படி சுற்றுவது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது.

முதலில் நவக்கிரகங்களை மொத்தம் ஒன்பது முறை சுற்ற வேண்டும்.

ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும்.

ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.

சுற்றி வரும்போது நவகிரகங்களைத் தொட்டு வணங்க கூடாது.

ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு பலனைத் நமக்கு அள்ளி தருகிறது.

புகழுக்கு சந்திரனும், ஆரோக்யத்துக்கு சூரியனும், மன வலிமைக்கு செவ்வாயும், புத்தி கூர்மை பெற புதனும், குறையில்லா செல்வம் பெற குரு பகவானும், இல்வாழ்க்கை, மனை யோகம் பெற சுக்கிரனும், ஆயுள் பலம் அதிகரிக்க சனிபகவானும், வெற்றிக்கு ராகுபகவானும், ஆன்மிக ஞானம் பெற, கேதுபகவானும் அருள் புரிவார்கள்.

நவகிரகங்களை முதலில், 9 முறை சுற்றி வந்த பிறகு நீங்கள் விரும்பும் பலனை பெற, அந்த கிரகத்திற்குரிய எண்ணிக்கையில், மீண்டும் வலம் வந்து வணங்கினால் சிறப்பு பெறுவீர்கள் என்று சொல்லப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers