அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தோஷங்களை போக்க வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

ஜோதிட சாஸ்திரத்தில் விண்ணில் இருக்கும் 27 நட்சத்திரங்களில் முதலாவதாக வருவது அஸ்வினி நட்சத்திரம் என்று குறிப்படப்படுகின்றது.

இந்த நட்சத்திரங்களில் பிறக்கும் போது நட்சத்திரத்தின் நட்சத்திர பாதங்கள் காரணமாக சிலருக்கு தோஷங்கள் ஏற்பட்டு விடுகின்றது.

அந்தவகையில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பரிகாரம்
  • வருடமொரு முறை வசதி குறைந்தவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்.
  • அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் குதிரைகளுக்கு கொள்ளு தானியங்களை உணவாக தர வேண்டும்.
  • அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாக கேது பகவான் இருப்பதால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கேது பகவானை வழிபட்டு வரவேண்டும்.
  • மருந்துகள் வாங்க வசதியற்ற ஏழைகளுக்கு மருந்துகளை வாங்கி தருவது சிறந்த பரிகாரமாகும்.
  • அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்று எட்டி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அந்த எட்டி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, அந்த எட்டி மரத்திற்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதாலும் அவர்களின் தோஷங்கள் நீங்கப் பெறும்.
  • தினந்தோறும் சரஸ்வதி தேவி மந்திரத்தை கூறி வழிபடுவது அவர்களுக்கு பல நன்மைகளை தரும். விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்