அஷ்டம சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியதிகளைக் கடைப்பிடித்தால் போதும் பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

 • பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
 • தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
 • சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
 • கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
 • வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
 • சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
 • சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
 • விநாயகர் வழிபாடு செய்யலாம்.
 • அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.
 • ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 • தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 • ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவலாம்.
 • சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
 • அன்னதானத்துக்கு உதவி செய்யலாம்.
 • சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
 • வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers