ரிஷப ராசிக்காரர்களே! வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

12 ராசிகளுள் இரண்டாவது இடத்தில் ரிஷப ராசிக்காரர்கள் உள்ளார்கள். ஜோதிடத்தில் ரிஷப ராசிக்குரிய சின்னமாக எருது இருக்கிறது.

அந்தவகையில் இவர்கள் தங்கள் வாழ்வில் என்றென்றும் நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் ஏற்பட கீழ்கண்ட பரிகாரங்களை செய்தாலே மட்டும் போதும். தற்போது இந்த பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும்.

  • ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் பொருளாதார ரீதியான அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதற்கு வருடத்தில் ஒரு முறையாவது தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு வெள்ளை நிற தாமரைப் பூ, மல்லிகை பூ ஆகியவற்றை சமர்ப்பித்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

  • வெள்ளிக் கிழமைகள் தோறும் சுக்கிர பகவானுக்கு சுக்கிர விரதம் இருப்பது உங்களின் செல்வ வளத்தை பல மடங்கு பெருக செய்யும் சக்தி வாய்ந்ததாகும்.

  • இந்தச் சுக்கிர விரதம் இருக்கும் சமயம் ஆண்கள் வெள்ளை நிற ஆடையும் பெண்கள் சிவப்பு நிற ஆடையையும் அணிந்து கொள்ள வேண்டும் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்குரிய துர்க்கை சப்தசதி ஸ்தோத்திரங்களை துதித்து வர வேண்டும்.

  • ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தில் வசதி குறைந்தவர்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானமாகத் தருவது சிறந்த பலனளிக்கும்.

  • இந்த ஆடை தானம் தரும் போது, பால், தயிர், சர்க்கரை போன்றவற்றையும் சேர்த்து தானமாக தந்தால் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

  • ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் புண்ணிய நதிக்குச் சென்று அந்த நதி நீரில் தூய்மையான வெல்லத்தை கரைத்து வழிபடுவதால் உங்களின் தோஷம் நீங்கி தொழில் வியாபாரங்களில் பணமுடை ஏற்படாமல் காக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்