வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இன்று! சரியாக புரிந்துகொள்வது நம் கடமை தானே

Report Print Raana in ஆன்மீகம்

வாழ்க்கையில் நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரியத்தை தொலைத்து கொண்டிருக்கிறோம். நம் முன்னோர்கள் செய்து வந்ததை உதறி தள்ளிவிட்டு சரியான முறையில் வாழாமல் அல்லல் பட்டுகொண்டிருக்கிறோம்.

வருடத்தின் முக்கியமான மூன்றரை திதிகளில் ஒன்று அட்சய திரிதியை. அது இவ்வருடம் சித்திரை மாதம் 24 ம் நாளான மே 7ல் வளர்பிறையும் அமாவாசைக்கு பின் மூன்றாம் திதியாக திரிதியை திதியில் வந்துள்ளது. அதிலும் ரோகிணி நட்சத்திரத்தில் இந்த நாள் அமையப்பெறுவது இன்னும் சிறப்பானது.

அப்படியான இந்த சிறப்பு மிகுந்த இந்த மங்களகரமான நாளில் தான் வறுமையின் பிடியில் இருந்த குசேலன் தன் உயிர் நண்பன் கிருஷ்ணரை காணவந்து அவலை கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது குசேலனுடைய வீட்டை அரண்மனையாக மாட மாளிகையாக மாற்றி கிருஷ்ணன் லீலை செய்த நாளும் இந்நாளே.

அதே போல வீட்டிலிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை, வாசலில் பிச்சை கேட்டுவந்த ஆதிசங்கருக்கு ஏழை பெண் ஒருத்தி கொடுக்க, சங்கரர் பொன்மழையை பொழியும் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாட, ஏழை பெண்ணின் வீட்டு குடிசையில் தங்க நெல்லிக்கனியை மழை போல கொட்டி அருள் செய்தாள் அன்னை மகாலட்சுமி.

சிவபெருமான் பிச்சாடன மூர்த்தியாக திருவோடு ஏந்தி சென்றுகொண்டிருக்கையில் அவருக்கு காசியில் அன்னபூரணியாய் அருளும் பராசக்தி தேவியும் பொங்கி வழியும் அளவுக்கு உணவளித்தாள் என்பது ஐதீகம்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றை தான். அது ஏழை எளியோருக்கு நம்மால் முடிந்ததை தானம் செய்தால் இறைவன் நமக்கு தேவையான செல்வத்தை தருவான் என்பதே.

ஆனால் இப்படியான இந்த சிறப்பு மிகுந்த நாளை வர்த்த உலகில் கார்பொரேட் மயத்தால் மக்களை தங்கள் பக்கம் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரக்கூடிய விடயம்.

அதனால் இந்த சிறப்பு மிகுந்த நாளை சரியாக புரிந்துகொண்டு முறையாக வாழ்ந்து வாழ்வில் வளமும் நலமும் பெற லங்காசிறி வாழ்த்துகிறது. மேலும் விவரங்களுக்கு வீடியோ இதோ

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers