தனுசு ராசியினரே! அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட இவற்றை செய்தால் போதும்

Report Print Kavitha in ஆன்மீகம்

12 ராசிகளில் ஒன்பதாவது ராசியாக வருவது தனுசு ராசி ஆகும்.

தனுசு ராசியை ஆளும் நவகிரக நாயகனாக முழு சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார்.

இந்த தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகுதியான செல்வமும், யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்.

  • வருடத்திற்கொருமுறை ஏதானும் குரு கோயில்களுக்கு சென்று பகவான் குரு பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
  • வியாழக்கிழமைகள் தோறும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற கொண்டக்கடலை மாலை சாற்றி, பசு நெய் தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும்.
  • தினமும் காலையில் உங்கள் வீட்டிலிருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பாக தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து வழிபட்டு செல்வதால் தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும்.
  • புதிய முயற்சிகள் பணம் சம்பந்தமான விடயங்களை மாதத்தில் வருகின்ற 3, 12, 21 ஆகிய தேதிகளில் மேற்கொள்வது உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும்.
  • உங்களால் முடிந்த போது துறவிகளுக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தை தானம் செய்வது குரு பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும்.
  • தரமான புஷ்பராகக் கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து, ஒரு வளர்பிறை வியாழக்கிழமை தினத்தன்று உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டங்களை அதிகம் ஏற்படுத்தும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers