12 ராசிக்காரர்களும் இந்த தானங்களை செய்தால் கோடி நன்மையாம்! அது என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

என்ன தவறு செய்தாலும், பாவம் செய்தாலும் தானம் செய்தால் புண்ணியம் சேர்க்கலாம் என நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.

"தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, 'நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளைத் தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள்' என்று சொன்னார்கள்.

அந்தவகையில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers