பூரம் நட்சத்திரக்காரர்களே! வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இந்த பரிகாரத்தை செய்திடுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

நட்சத்திர வரிசைகளில் பூரம் பதினோறாவது நட்சத்திரமாக வருகின்றது.

இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்யதாலே போதும். தற்போது அந்த பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்.

  • உங்களால் முடிந்த போது சிவன் கோயில்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்பட வழிவகை செய்யும்.
  • சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி, வழிபாடு செய்வதும் நன்மை பயக்கும் ஒரு பரிகாரமாக இருக்கிறது.
  • பூரம் நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக பலா மரம் இருக்கிறது. எனவே பலா மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று பலா மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட செய்யும்.
  • கோயில்களுக்கு பலாபழங்களை தானமாக வழங்குவதும் உங்களுக்கு சிறப்பான யோகங்களை ஏற்படுத்தச் செய்யும்.
  • உங்கள் வீடடிற்கு அருகில் வசிக்கும் பறவைகள், அணில், பூனை, நாய் போன்ற ஜீவராசிகளுக்கு தினந்தோறும் உணவிடுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் உங்களின் கர்ம வினைகளும், தோஷங்களும் நீங்கி மேன்மையான பலன்கள் ஏற்படும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்