உங்கள் கையில் எப்போதும் பணம் புரளனுமா? இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

பண பிரச்சினை பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் அன்றாட பிரச்சினை ஆகும்.

இதற்கு நமது முன்னோர்கள் கூறிய சில தாந்த்ரிக பரிகார முறைகளை பல உள்ளது.

இதனை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.

தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

பரிகாரம்

  • ஒரு புதன் கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

  • அந்த வெற்றிகள் அனைத்தும் காம்புகளுடன் இருக்க வேண்டும். வெற்றிலையின் கீழ்நுனிப்பகுதி கூர்மையாக இருப்பது அவசியம்.

  • அந்த புதன் கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளாக உங்கள் பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு, அந்த ஐந்து வெற்றிலைகளிலும் சிறிது அளவு பசு நெய்யினை நன்றாக இலைகள் முழுவதும் பரவலாக தடவ வேண்டும்.

  • பிறகு அந்த வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • ஒரு கைக்குட்டை அளவிலான தூய்மையான பட்டுத்துணியை முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

  • அந்த பட்டுத்துணியில் இந்த ஐந்து வெற்றி இலைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, அந்தப் பட்டுத் துணியை இந்த வெற்றிலைகள் முழுவதும் மறைக்குமாறு நான்கு புறமும் நன்றாக மூடி, ஒரு சிகப்பு நிற நூல் கொண்டு வெற்றிலை முடிந்திருக்கும் பட்டுதுணி மடிப்பை கட்டி முடிந்து கொள்ள வேண்டும்.

  • இதன் பிறகு இந்த வெற்றிலைகள் அடங்கிய பட்டுத்துணி முடிப்பை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரியில் வைக்க வேண்டும்.

  • அல்லது உங்கள் தொழில், வியாபாரங்கள் நடைபெறும் இடங்களில் இருக்கும் பணப் பெட்டியில் வைக்க வேண்டும்.

இந்த பரிகாரம் உங்கள் வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமால் காக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers