12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய கிரகம் எது? தெய்வம் எது?

Report Print Kavitha in ஆன்மீகம்

12 ராசிக்கும் தனித்தனியாக கிரகங்கள் உண்டு. அந்த கிரகங்களை ஆளும் தெய்வங்களும் உண்டு.

அந்தவகையில் உங்களின் ராசிக்கான கிரகம் எது? தெய்வம் எது? என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் பலத்தை பெறுவதற்கு அந்த முருகனின் ஆசியைப் பெற வேண்டும்.

முருகனின் ஆசியைப் பெற வேண்டுமென்றால் அந்த சிவனையும் வழிபட வேண்டும். பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் பலத்தை பெறுவதற்கு அந்த மகா லட்சுமியை வணங்க வேண்டும்.

மகாலட்சுமியை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளும் போது உங்கள் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புதனின் பலத்தை பெறுவதற்கு நாராயணனை வழிபட வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்று ஒருமுறை நினைத்தால் போதும் உங்கள் சங்கடங்கள் நீங்கி விடும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சந்திரனின் பலத்தை பெற வேண்டுமென்றால் அம்மன் வழிபாட்டில் அதிகமாக ஈடுபட வேண்டும்.

அந்த சந்திரனை வானில் தரிசிக்கும்போது மனதார வணங்குவது நன்மை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் பலத்தை பெற வேண்டுமென்றால் சிவனை மனதார வணங்க வேண்டும்.

சிவ சிவ, ஓம் நமசிவாய என்ற வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நல்ல பலன்பெறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் புதனின் பலத்தை பெறுவதற்கு நாராயணனை மனதார நினைத்து வழிபட வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்னும் மந்திரம் நல்ல பலனைக் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் பலத்தைப் பெற மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். மகாலட்சுமி வணங்குவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாயின் பலத்தை பெறுவதற்கு, சிவபெருமானையும் முருகனையும் வழிபடுவது நன்மை தரும். பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குருவின் பலத்தை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

உங்கள் வேலையில் உங்களுக்கு யார் குருவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசியாளர்கள் சனியின் பலத்தை பெறுவதற்கு சனிபகவானின் குருவான பைரவரை வழிபடுவது சிறப்பான பலனை தரும். சிவபெருமானையும் நினைத்து வழிபடலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனியின் பலத்தை பெறுவதற்கு சிவபெருமானையும் முருகனையும் வழிபட வேண்டும். பிரதோஷ வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் குருவின் பலத்தை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தியை வணங்குவது நன்மை தரும்.

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு குருவாக இருப்பவர்களுக்கு நல்ல மதிப்பு தருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்