உங்கள் வீட்டில் பணம் நிறைந்து கொட்டணுமா? இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்
406Shares

பொதுவாக நம் அனைவருமே அன்றாடம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் பணப் பிரச்சனை.

என்னத்தான் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவில்லையே என்ற கவலை இன்று பலரிடம் உள்ளது.

அந்தவகையில் வீட்டில் வரும் வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைக்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

  • ஒரு சிறிய அளவு மண்பானையும், அந்த பானையை நிரப்பும் அளவிற்கு சில்லரை காசுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.
  • மண் பானையை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி காயவைத்துக் கொள்ள வேண்டும். அந்த பானையில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சில்லரை காசுகளை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
  • காசுகள் நிரப்பப்பட்ட அந்தப் பானையை தென்மேற்கு மூலையில் வைத்து விடவேண்டும்.
  • அந்த பானையின் வாய் பகுதியானது கிழக்கு பக்கம் பார்த்தபடி, பானையை கீழே சாய்த்து விடுங்கள்.
  • அந்தப் பானையை நீங்கள் ஒரு பக்கமாக சாய்க்கும் போது ‘ஓம் தன பிராப்தி நமஹ’ என்ற மந்திரத்தை உங்கள் மனதார உச்சரித்துக் கொள்ள வேண்டும். யார் கண்களுக்கும் தெரியமால் அந்த இடத்தில் அந்த சாய்ந்த பானையையும், அந்த சிலரை காசையும் வைத்து விடுங்கள்.
  • உங்கள் வீட்டில் குபேர மூலையான, தென்மேற்கு மூலையில் பணம் வைக்கும் பெட்டி இருந்தால், அதன் உள்ளே கூட நீங்கள் இப்படி வைத்துக் கொள்ளலாம்.
  • ஆனால் இதை யாரும் பார்க்கக் கூடாது என்பது முக்கியமான ஒரு விஷயம். யார் கண்ணிற்கும் தெரியக்கூடாது என்பதற்காக இதை துணி அல்லது வேறு ஏதும் பொருள் போட்டு மூடிவிடவும் கூடாது.
  • வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறந்தது. இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் மட்டும் போதும்.
  • அந்தப் பானையில் சில்லரை காசுகள் எப்படி நிரம்பி உள்ளதோ அதேபோல் உங்களது வீட்டிலும் மகாலட்சுமி நிறைந்து இருப்பாள் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்