சிவபெருமான் கழுத்தில் உள்ள விஷம்தான் கொரோனா வைரஸா? அகத்தியர் அன்றே கூறிய உண்மை

Report Print Kavitha in ஆன்மீகம்

இன்று உலகையே நாடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி பல பல தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமே உள்ளது.

இதில் பல தகவல்கள் போலியானவையும், வதந்தியாகவுமே இருக்கின்றது.

உண்மையில் இந்த நோய் முதலில் பாம்பின் இறைச்சியில் இருந்து மட்டும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது என்றும் அந்த வைரஸ் தொற்று எங்கிருந்து யாரிடமிருந்து பரவியது என்று மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற ஒரு கொடூரமான வைரஸ் பாம்பின் விஷத்தில் இருந்தும் உருவாகும் என்றும் இந்த உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் சிவபெருமானுக்குமே சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை சித்தர்கள் தங்களுடைய ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் அகத்திய முனிவர் தன்னுடைய ஒரு பாடலில், கொரோனா வைரஸ் என்ற பெயரில்லாமல், பாம்பிலிருந்து உருவாகின்ற வைரஸ் எப்படி உருவாகிறது, அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தன்னுடைய பாடலில் விவரித்துக் கூறியிருக்கிறார்.

​அகத்தியர் கூறுவது என்ன?

“சர்ப்பமுண்டு சர்வ நோயுமுண்டு கர்ப்பமறியா கன்னியும்

வாயு பகவான் பகைகொண்டு பித்தம் சித்தம் சிதை கொள்வாள்”

இந்த பாடலின் அர்த்தம் என்னவென்றால், பாம்பை சாப்பிடுகின்றவர்களுக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லா நோய்களும் ஒன்று சேர்ந்தது போல, அதிக உடல் பலமாக இருக்கின்றவர் குழந்தை பெற்றுக் கொள்ளாத கன்னிப் பெண்ணால் கூட தாங்கிக் கொள்ள முடியாத, நுரயைீரலைத் தாக்கி உயிரையே அழிக்கத் துணியும் நோய்க்கு ஆளாவார்கள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.

​கொரோனா தொற்றுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு?

தேவர்களும் அசுரர்களும் பாம்பைக் கயிறாகக் கொண்டு இழுத்த போது, பாம்பு விஷத்தைக் கக்கிய போது சிவபெருமான் அதை எடுத்து விழுங்கி, தன்னுடைய தொண்டையிலேயே நிறுத்திக் கொண்டார்.

ஆனால் சிவன் தொண்டையிலேயே அடக்கிக் கொண்டதால் தொண்டைப்பகுதி மட்டும் நீலநிறமாகி, நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார்.

சிவன் விழுங்கியது கொரோனா வைரஸ் தான் என்றும் ஏனென்றால் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வலிப்பு, மூளை நரம்புத் தாக்குதல் ஏற்படுவதோடு இறப்பும் நேருகிறது. சிவனுக்கு தொண்டை நீலமானது போல இந்நோய் தாக்குபவர்களின் உடல் நீலநிறமாக மாறுகிறது.

இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்கும் சிவனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்