உங்களுக்கும் கோடீஸ்வர யோகம் வேண்டுமா? அப்போ மகாலக்ஷ்மியை இப்படி வழிப்படுங்க!

Report Print Kavitha in ஆன்மீகம்

மகாலக்ஷ்மியின் அருள் இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என நமது முன்னோரகள் நம்மிடம் அடிக்கடி கூறுவதுண்டு.

அந்தவகையில் மகாலக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது. அவற்றை செய்தாலே போதும் கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது அந்த வழிபாடை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைக்குரிய ஏற்பாடுகளை செய்தபின் குத்து விளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைக்கவும்.

  • விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்து வைத்து கொள்ளவும். விளக்கின் பாதத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வையுங்கள்.

  • பூக்களில் மல்லிகை கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பின்னர் கிராம்புகளை 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • அதே எண்ணிக்கையில் ஏலக்காயையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி, நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ளுங்கள்.

  • கிராம்பை பூ காட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டி கொள்ளுங்கள். நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல், காய்ந்த திராட்சை முத்துக்கள், மாதுளம் பழம் 1, நெல்லிக்கனிகள் 5 இவற்றை ஒரு தட்டில் வைத்து விளக்கின் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள்.

  • வெற்றிலை-பாக்கு, பழம் வைத்து அதன் மீது 501 ரூபாய் காணிக்கை வைக்கவும்.

  • இந்த இரண்டு மாலைகளையும் விளக்கிற்கு சாற்றி விளக்கின் 5 முகங்களிலும் தீபமேற்ற வேண்டும்.

  • தீபம் ஏற்ற வேண்டிய நேரம் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நேரத்தில் செய்து கொள்ளலாம். தீபம் ஏற்றும் பொது மஹாலக்ஷ்மி ஸ்லோகத்தை வாசிக்கலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்