சனி பகவான் பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம்?

Report Print Kavitha in ஆன்மீகம்

பொதுவாக சனி பகவான் என்றாலே மனதில் ஒரு வித பயம் ஏற்படுவது வழக்கம்.

நவகிரகங்களில் எந்த ஒரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனி பகவானுக்கு உண்டு.

சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும். ஒரு லக்னத்திலிருந்து இன்னொரு லக்னத்துக்குச் செல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே.

குறிப்பாக சனி பகவான், "அர்த்தாஷ்டம, கண்ட, அஷ்டம, ஏழரை சனியாக கோட்சாரத்திலும், 19 வருட தசா காலமாகவும், ஒருவரின் வாழ்வில் வந்து சோதித்து பார்க்கின்றேன்.

இருப்பினும் கிரகங்கள் மனிதனுக்கு தரும் பாதிப்புகளில் இருந்து கூட சில பரிகாரங்கள் மூலம் எளிதில் மீண்டு வர முடியும்.

இதனடிப்படையில் னி பகவான் பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் மேற்கொள்ளலாம் என்று இங்கு பார்ப்போம்.

  • முதலில் தேங்காய் ஒன்றை வாங்கி சனிக்கிழமை அன்று இரவு வேளையில் சனி பகவானை மனதில் நினைத்து கொண்டு தேங்காயை முழுவதுமாக நார் உரித்து கொள்ள வேண்டும்.

  • பின்னர் அதன் மூன்று கண்களிலும் துளையிட்டு கொள்ள வேண்டும். துளையை சற்று பெரிதாகவே போடலாம்.

  • அதில் பாதியளவு தேங்காய் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் இருந்தால் சிறிது கீழே ஊற்றி விடுங்கள்.

  • பின்னர் அதில் நிரம்ப நிரம்ப சர்க்கரை போட்டு கொண்டே வர வேண்டும். தேங்காய் முழுவதும் சர்க்கரை கரைசல் இருக்கும்.

  • துளையிட்ட பாகத்தில் ஒரு வெற்றிலை கொண்டு மூடிவிடுங்கள். ஒரு கருப்பு பருத்தி துணியை விரித்து அதில் இந்த தேங்காயை வைத்து நன்றாக இறுக மூடிவிடுங்கள்.

  • இந்த பரிகாரம் செய்ததும் வீட்டிலிருந்து சற்று தொலைவான பகுதியில் சென்று அங்கிருக்கும் ஏதாவது ஒரு பெரிய மரத்தின் அடியில் பள்ளம் தோண்டி இதனை புதைத்து விட வேண்டும்.

  • காலை வேளை வரும்வரை மனதில் குழப்பங்கள் தோன்றும். இதற்கு அனுமரின் நாமத்தை உச்சரித்துவிட்டு உறங்க செல்லுங்கள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்