காலத்தால் அழிக்க முடியாத கிருஷ்ணர்– ராதையின் காதல் கதை

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

கிருஷ்ணன் இந்து சமய கடவுளாக வணங்கப்படுகிறார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரங்களுள் ஒருவர். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக உருவெடுத்தார்.

வருடத்தில் ஒரு நாள் கிருஷ்ணரை போற்றும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக கிருஷ்ணரை பற்றி மகாபாரதம், அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் கூறப்படுகிறது.

கிருஷ்ணரின் கதை

வசுதேவர் - தேவகிக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் உள்ள சிறையில் கிருட்டிணன் பிறந்தார். கிருட்டிணரின் தாய்மாமன் கம்சன் ஒரு கொடூரமான அரசன். வசுதேவர், தேவகிக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அந்த கொடூர அரசன் கொலை செய்து வந்தான்.

எட்டாவதாக பிறந்த கிருஷ்ணரை எங்கே கம்சன் கொன்றுவிட போகிறாரோ என்று அஞ்சிய வசுதேவர் கிருஷ்ணர் பிறந்த அன்று இரவு கிருஷ்ணரை யமுனை ஆற்றுக்குப் அப்பால் கோகுலத்தில் உள்ள நந்தகோபர், யசோதை வீட்டில் குழந்தை கிருஷ்ணரை விட்டுவிட்டு வந்துவிட்டார்.

கோகுலத்தில் வாழ்ந்த மக்களின் தலைவராக நந்தகோபர் திகழ்ந்தார். நந்தகோபரும், அவரின் மனைவி யசோதா கிருஷ்ணரை வளர்த்து வந்தனர்.

சிறு வயதில் கிருஷ்ணர் மிகவும் குறும்புத்தனத்தோடு இருந்து வந்தார். பிருந்தாவனத்தில் குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்தார். பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையாக கிருஷ்ணர் இருந்தார்.

தாய்மாமன் தன்உயிரை கொல்பவன் கோகுலத்தில் உள்ளான் என்ற செய்தியை கேட்டதும், கொடிய அசுரர்களை கோகுலத்திற்கு அனுப்புகிறான். ஆனால் கிருஷ்ணன் அந்த அசுரர்களை வதம் செய்கிறார்.

மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை கிருஷ்ணர் காப்பாற்றினார். மக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கி, பாம்பின் தலையின் மேல் நடமாடி மக்களின் மனதை கவர்ந்தார் கண்ணன்.

கிருஷ்ணரும், ராதையும்:

பாலகனான கிருஷ்ணர் சிறு வயதிலிருந்தே ராதையை காதலித்தார். ஆனால் ராதையை திருமணம் செய்யவில்லை.

கிருஷ்ணர் என்ற பெயரைச் சொன்னாலே அடுத்து ராதைகிஷ்ணா என்று கிருஷ்ணரை வணங்குவார்கள். ராதைக்கும், கிருஷ்ணருக்கும் இருந்த காதல் ஆழமானது. காதலுக்கு உதாரணமாக இருவரும் சொல்லப்பட்டனர்.

அதேசமயம் கிருஷ்ணர் மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொண்ட பின்னரும்கூட, இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு தொடர்ந்தது.

அப்படி என்ன அவர்களுக்குள் தேய்வீக உறவு இருந்ததை பார்ப்போம்.

ஒரு நாள் ராதாவே கிருஷ்ணரிடம் கேட்டார். "கிருஷ்ணா! நீங்கள் ஏன் என்னை காதலிக்கிறீர்கள். திருமணம் மட்டும் செய்ய மறுக்கிறீர்கள்.

ஆனால் மற்ற பெண்களை மட்டும் திருமணம் செய்து கொள்கிறீர்கள்” அது ஏன் என்று கேட்டதற்கு, கிருஷ்ணர் பதில் அளித்தார்.

திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று. அது ஒரு ஒப்பந்தம். ஆனால் அது எப்போதுமே இரண்டு உயிராகத்தான் இருக்க முடியும். ஆனால் காதல் அப்படியல்ல. அது ஒரே உயிராக மட்டும் தான் இருக்க முடியும். நாம் இருவரும் எப்போதும் ஒரே உயிர் தான் இருக்க வேண்டும். இரண்டு நபர்களாக அல்ல என்று சொன்னாராம்.

நமக்கு இடையே தேவலோக பந்தம் இருக்கிறது. ஆனால் பூலோக திருமணம் நம் இருவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. நம்மால் கணவன் மனைவி ஆக முடியாது என்று கிருஷ்ணர் சொன்னார்.

அப்போது, ராதைக்கு கிருஷ்ணர் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறார். இந்த உலகத்தில் யார் ஒருவர் என்னை எப்போதும் மனதில் நினைத்தாலும் என்னுடைய பெயருக்கு முன்னால் உன்னுடைய பெயர் அவர்களுக்கு நினைவுக்கு வரும்.

என் பெயருக்கு முன்னால் ராதைகிருஷ்ணர் என்றுதான் மக்கள் என்னை வணங்குவார்கள் என்று சொன்னாராம். அப்போது பக்தர்களுக்கு என்னுடைய மற்ற மனைவிகள் அவர்கள் மனதில் வர மாட்டார்கள். நீ மட்டும்தான் வருவாய் என்று கிருஷ்ணர் சொன்னாராம்.

ஏனென்றால் நம்முடைய காதல் அளவிட முடியாதது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதலுக்கு முன் மற்ற எதுவும் இவ்வுலகில் பெரியது இல்லை என்றார்.

ஆனால், ராதை மற்றொருவருக்கு திருமணமாகி மனைவியாக இருந்தாலும் கிருஷ்ணரை அவளால் மறக்க முடியவில்லை. ஏனெனில் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தனர். அதனால் ராதையால் கிருஷ்ணரை மறக்கவே முடியவில்லை.

கிருஷ்ணர் எப்போதெல்லாம் ராதையை மனதால் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் ராதை கிருஷ்ணர் முன் வந்து நிற்பாள்.

இது காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. .

பின்னர் அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமன் மற்றும் கிருஷ்ணர் மதுரா சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியை தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்தார்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்