குருபகவானை தனக்கு இணையாக வணங்கச் சொன்ன முருகன்! ஏன் தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

“சூரபத்மன்” எனும் அரக்கன் நீண்டகாலமாக தேவர்களையும், முனியவர்களையும் அச்சுறுத்தி வந்தான்.

அவனை அழிப்பதற்காக சிவ பெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர்தான் முருகபெருமான். முருகன் சூரபத்மனையும், அவனது அராஜக ஆட்சியையும் அழிக்க அவனுடன் போர்புரிய தொடங்கினார். குரு பகவான் இப்போரில் முருகப்பெருமானுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார்.

முருகன் இப்போரின் இறுதியில் சூரபத்மனை வதம் செய்து வெற்றி பெற்றார். தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த குருபவானை கவுரவிக்க முருகன் நினைத்தார்.

எனவே, நான் வீற்றிருக்கும் திருச்செந்தூர் கோவிலில் எனக்கு செய்யும் வழிபாட்டு மரியாதையை குரு பகவானுக்கும் தர வேண்டும் என்று பக்தர்களுக்கு முருகன் அருள்புரிந்தார். எனவே இத்தலம் முருகனைனே குரு பகவானாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையாக விளங்கும் தலம் திருச்செந்தூர்தான். திருச்செந்தூரில் முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

திருச்செந்தூர் மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் அந்த இடத்தை கல்விக்குரிய இடமாக கருதப்படுகிறது. கர்ம வினைகளை நீக்கக்கூடிய இடமாக சொல்லப்படுகிறது.

ஜாதகத்தில் குருவின் கோட்சாரம் சரியில்லாதவர்கள் இந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் வியாழக்கிழமையன்று காலையில் நீராடி, பின்பு அங்கிருக்கிருக்கும் நாழி கிணற்று தீர்த்த நீரிலும் நீராடி, கோவிலுக்குச் சென்று செந்திலாண்டவரை அர்ச்சனை செய்து வழிபடால் குரு பகவானால் பக்தர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் கோவிலின் கடல் மற்றும் தீர்த்தத்தில் நீராடி, பின்பு இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகன் மற்றும் குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட்டு, கோவிலை 9 முறை சுற்றி வந்தால் உயர்பதவிகள் கிடைக்கும். தங்கம், பொன் சேர்க்கை வீட்டில் அதிகரிக்கும்.

கோவிலில் பக்தர்கள் வழிபடும் விதிமுறைகள்:

  • கோவிலுக்குச் செல்வதற்கு முன் கடலில் நீராட வேண்டும். பின்புதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
  • பக்தர்கள் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்) சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும்.
  • கோவிலுக்குச் சென்று விளக்கேற்றுவது மிகவும் பலன் கொடுக்கும்.
  • மூலவரை வலமிருந்து இடமாக சுற்றி ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
  • கூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் கிடைக்காது. மூலவர்கள் இரண்டு பேர் உள்ளனர். 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்.
  • திருச்செந்தூரில் குருவானின் குருப்பெயர்ச்சிக்கு இங்கு பெரிய விஷேசமாய் இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்கினால் போதும். அனைத்து செல்வமும் உங்களை தேடி வரும்.
  • பின்பு வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்ய வேண்டும்.
  • சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது. வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார், அவரை வணங்கி, தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும்.
  • திருச்செந்தூரில் பெருமாள் நாராயணன் சன்னதி இருக்கிறது. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும். அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும். இந்த ஒலியை கேட்டு நீங்கள் அருள் பெறலாம்.
  • பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்!

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...