தமிழ் பக்தரின் கண்ணில் தென்பட்ட முருகனின் வேல்!... கோவில் உருவான வரலாறு

Report Print Nalini in ஆன்மீகம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது உலக புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பத்துமலைக் குகை முருகன் கோயில்.

இங்குள்ள முருகப்பெருமான் சுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார்,

இங்கு இரு குகைகள் உள்ளன. ஒரு குகை மிகவும் ஆழமாகவும், இருட்டாகவும் உள்ளது. இன்னொரு குகையில்தான் முருகன் இருந்துள்ளார்.

இந்த குகையில் முருகனின் வேல் இருந்தது தமிழ் பக்தர் ஒருவருக்கு கண்ணில் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

காவடிகள் ஏந்தியும், முதுகில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

மதப்பாகுபாடு இல்லாமல் அனைவரும் இறைவன் முன் சமம் என்பதே இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்