மே மாதத்தில் 6 கிரகணங்கள் பின்னோக்கி செல்வதால் ஏற்படப்போகும் பலன்கள்!

Report Print Nalini in ஆன்மீகம்

2020ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே பெரிய பிரச்னையாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பிடியில் உலகம் மாட்டிக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தற்போது நடக்கும் மே மாதத்தில் 6 கிரகங்கள் வக்ர நிலையாக பின்னோக்கி செல்லுதல் நிகழ்வு நடக்கிறது.

இதனால் எப்படிப்பட்ட பலன்களை இந்த உலகம் மற்றும் தனி நபர்கள் பெறப்போகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்...

 • நம் பிறப்பு நேரத்தை வைத்தும், கிரக நிலையைப் பொறுத்து தனி மனிதனின் பலன் கணிக்கப்பட்டுள்ளது.
 • 9 கிரகங்களில் ராகு - கேது எப்போது எதிர் திசையில் அதாவது பின்னோக்கி சுழலும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த மே மாதத்தில் பின்னோக்கி செல்லுதல் அதாவது வக்ர நிலை இல்லாத சூரியன், சந்திரனைத் தவிர செவ்வாய் பகவான் சாதாரணமாக சுற்றும் திசையில் சுற்றிக் கொண்டிருக்கிறார். மற்ற 6 கிரகங்கள் வக்ர நிலையில் உள்ளது.
 • 6 கிரகங்கள் இப்படி பின்னோக்கி சுற்றுவதால் உலகத்திற்கே மிக பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. ராகு - கேதுவை தவிர சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் கடிகார முள் சுற்றுவது போல சுற்றி வருகின்றது. மொத்தம் 12 ராசிகள் உள்ளன.
 • அதில் ஒரு கிரகம் சூரியனுக்கு 5ம் இடத்தில் வரும் போது அந்த கிரகம் வக்ர நிலை அடைகின்றது. அதுவே 7ம் இடத்தை அடையும் போது அதிவக்ரமாகவும், 9ம் இடத்தை அடையும் போது வக்ர நிவர்த்தியும் அடைகிறது.
 • ஜோதிடம் பூமியை மையமாக வைத்து சூரியன் சுற்றுவது போல கணிக்கப்படுகிறது. அதோடு சந்திரனை ஒரு கிரகமாக பார்க்கப்படுகின்றது. ராகு - கேது என்ற நிழல் கிரகங்கள் எப்போதும் எதிர் திசையில் அதாவது இடமிருந்து வலமாக சுற்றும் கிரகமாகும்.
 • மே 11ம் தேதி சனி தான் இருக்கும் இடமான மகர ராசியிலேயே வக்ர நிலை பெறுகின்றது.
 • மே 13ம் தேதி சுக்கிரன் வக்ர நிலை அடைகின்றது.
 • மே 14ம் தேதி குரு பகவான் வக்ர நிலை அடைகிறார். ஜூன் 29 வரை வக்ர கதியில் மீண்டும் தான் இருக்கும் தனுசு ராசிக்கு செல்கிறார்.
 • மே 18ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை புதன் பகவான் வக்ர நிலையை அடைகிறார்.
 • இப்படி நான்கு கிரகங்கள் பின்னோக்கி செல்வதால் வக்ர நிலை அடையும் போது ஒரு கோணத்தில் அனைத்து கிரகங்கள் சந்திக்கும் போது பலருக்கு அது கெடு பலனை தரக்கூடியதாக அமையும்.
 • நீதி தேவன் என அழைக்கப்படும் சனி பகவான், மே 11 முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை மகர ராசியில் வக்ர நிலையில் இருப்பார். பொதுவாக சனி வக்ர நிலை அடையும் காலத்தில் பணிச்சுமை மற்றும் அதிக பொறுப்புகள் தரக் கூடியதாக இருக்கும். பலரும் தங்கள் திறமையை வெளிக்கொண்டு வர பல சிக்கலான சூழல் உருவாக்குவார்.
 • இது போன்ற சூழலை மெய்ப்பிக்கும் வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய சட்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 • சுக்கிர பகவான் சுக போகம், ஆடை, அலங்காரம். ஆடம்பர வாழ்வை தரக் கூடியவர். இப்படிப்பட்ட சூழலில் சுக்கிரன் மே 13 முதல் ஜூன் 25 வரை ரிஷப ராசிக்கு வக்ர கதியாக செல்கிறார். இதனால் சுகங்களை வழங்கக் கூடிய அதில் குறைபாடு இருந்தால் அதை முன்னேற்றத்தை கொடுப்பார்.
 • சுக்கிர வக்ர காலத்தில் தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை மாறும் வாய்ப்பு உண்டு. அடுத்து பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகும்.. சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது வரும். இதை உலக நாடுகள் அனைத்தும் செய்து கொண்டிருக்கும் நிலையில். இந்தியா அதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 • ஞானம் மாற்றும் புத்திசாலித்தனத்தைத் தரக் கூடியவர் குரு பகவான். அதிசாரம் அடைந்த குரு தற்போது மகரத்தில் இருக்கும் நிலையில், மே 14 முதல் செப்டம்பர் 29 வரை குரு வக்ர நிலைப் பெற்று தனுசு ராசிக்கு செல்வார்.
 • நன்மையை தரக் கூடிய குரு பகவான் வக்ர நிலை அடைவதால் நாடு மீண்டும் தன் பழைய நிலையை அடையக் கூடிய திறன் கிடைக்கும். அதோடு இதுவரை கிடப்பில் கிடந்த பணிகள் நிறைவேறும்.
 • இந்த காலத்தில் இயற்கை சீற்றம், மக்கள் போராட்டம் மற்றும் சில அமைதியில்லா பல நிகழ்வுகள் நடக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் இந்தியா சில வெளிநாடுகளுடன் நட்பு அதிகரிக்கும்.
 • வர்த்தகம், தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் புதிய சிந்தனை ஆகியவற்றின் சின்னமாக விளங்கக் கூடிய புதன் பகவான் ரிஷப ராசிக்கு வக்ர நிலை அடைகிறார்.
 • ரிஷப ராசியில் ஜூன் 18 முதல் ஜூலை 12 வரை இருப்பார். இந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் போன்ற சிக்கலான நிலைக்கு தீர்வு காணும் வகையில் சில நல்லது நடக்கும். யோசனைகள், தீர்வுகள், மருந்துகள் தோன்றும். புதன் வக்கிரத்தால் அண்டை நாடுகளுடனான உறவிலும், பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்படும்.
 • வக்ர நிலை அடையக் கூடிய கிரகங்களால் நாம் நல்ல மற்றும் கெடு பலன்களை சேர்த்து அறுவடை செய்யப்போகிறோம். பூமிக்கு மிக அருகில் இந்த நிகழ்வு காரணமாக பல சிக்கல்களும் பிரச்னைகளும் தோன்றக் கூடும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்