உப்பு பரிகாரத்தை இப்படி மட்டும் செய்துவிடாதீங்க...பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்! எச்சரிக்கை

Report Print Kavitha in ஆன்மீகம்

கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் அன்றாம் உணவிற்கு பயன்படுத்தும் உப்பிற்கு உண்டு.

அதனால் தான் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் விலக, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிய, கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என்றாலும் சரி, இப்படி பல வகையான நல்ல விஷயங்களுக்கு, பயன்படுத்தப்படுகின்றது.

இருப்பினும் இந்த உப்பை தவறான முறையில் யாரும் பயன்படுத்தி விடக்கூடாது.

ஏனெனில் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனையானது, இருக்கும் நிலைமையை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அந்தவகையில் கல் உப்பை வைத்து, செய்யக்கூடாத தவறு என்னென்ன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

  • ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டை துடைக்கும் போது, கல்லுப்பு போட்டு துடைக்க கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலானது அதிகரிக்கப்பட்டு, வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் இரட்டிப்பாகி, வீட்டில் இருக்கும் நிம்மதி முழுமையாக குறைந்துவிடும்.

  • ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த கல் உப்பை கலந்து குளிக்க வேண்டாம். மனரீதியான பிரச்சனையும் அதிகரிக்கும். உடல் ரீதியான பிரச்சனையும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

  • பொதுவாக சிலர் கண்ணாடி டம்ளரில் கல்லுப் போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்து குளியலறையில் , வீட்டின் கட்டிலுக்கு அடியில் , கதவுக்குப் பின்னால் வைப்பதுண்டு.ஆனால், அந்த உப்பு அழுக்கு படிந்த நிலையில் இருந்தாலோ அல்லது கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும் போது தண்ணீர் நிறம் மாறி இருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் கவனிக்காமல், பழைய உப்பை எடுத்து கொட்டாமல் அல்லது பழைய தண்ணீரை கீழே ஊற்றாமல், அப்படியே விட்டு விட்டீர்களானால், அந்த எதிர்மறை ஆற்றல் திரும்பவும் உங்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்