இந்த 3 பொருட்களை வைத்து சுத்தி போடுங்க.. எப்படிப்பட்ட கெட்ட சக்தி இருந்தாலும் உங்கள் உடம்பில் இருந்து தெறித்து ஓடிவிடுமாம்!

Report Print Kavitha in ஆன்மீகம்

ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. அந்தவகையில் நாம் நமது வீட்டில் இருந்தப்படியே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறை ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

எப்படி பரிகாரம் செய்வது?

  • பருத்திக்கொட்டை மூன்று, வரமிளகாய் மூன்று, ஓமம் ஒரு கைப்பிடி அளவு இவை மூன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • முதலில், வரமிளகாயை உங்கள் தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஓமத்தை எடுத்து உங்களது தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

  • அடுத்ததாக பருத்திக் கொட்டையையும் எடுத்து தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

  • உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை கொண்டுபோய் உங்கள் வீட்டு வாசலில் வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி விட்டு, உங்கள் தலையை சுற்றி வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் அந்த அக்கினியில் போட்டு விட வேண்டும்.

  • இரண்டு மா மரக்குச்சி, இரண்டு வெள்ளெருக்கு குச்சிகளை, அந்த அக்கினியில் போட்டு விடுங்கள்.

  • இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டியின் மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்