வரம் தரும் வரலட்சுமி விரதம்! எப்படி கடைபிடிப்பது? விரிவான தகவல் இதோ!

Report Print Kavitha in ஆன்மீகம்
2123Shares

ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.

இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான்.

இதனடிப்படையில் வரலட்சுமி விரதம் ஜூலை 31ம் தேதி (ஆடி 16) வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில் விரதம் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாடப்படுகிறது ?

வரலட்சுமி விரதம் செல்வ அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்காக கொண்டாடப்படுகிறது. அம்மாளின் ஆசிகளையும் வரங்களையும் பெறுவதற்காகவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
 • வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலி பெண்கள் முதல் நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
 • வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலம் இட்டு,அதன் மீது ஒரு வாழை இலையில் ஒரு படி அரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
 • பித்தளை(அ)வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு,1ரூ நாணயம், எலுமிச்சை பழம், கருகமணி இவை உள்ள செம்பே கலசம் எனப்படும்.
 • வாய்ப்பகுதியில் மாவிலை வைத்து கலசத்தின் மீது தேங்காய் வைக்க வேண்டும்.
 • தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும்.
 • அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ(அ)வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம் வாசளுக்கு அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும் மறுநாள் வரலட்சுமி விரதம் அன்று விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
 • வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களை தந்து அருள்வாயாக!" என்று அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு முகமாக வைக்க வேண்டும்.
 • பூஜை செய்யும் போது வடக்கு முகமாக அமர்ந்து பூஜிக்க வேண்டும்.
விரதத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

வரலட்சுமி விரதத்தின் போது மகாலட்சுமியின் அருளை பெற நிறைய மந்திரங்கள் இருக்கின்றன.

இருப்பினும் இரண்டு மந்திரங்கள் இந்த விரதத்திற்கான மிகவும் உகந்த சக்தி வாய்ந்த மந்திரங்கள் “லட்சுமி அஷ்டோத்திரம் , லட்சுமி சகாஸ்ரணபம்” ஆகும்.

வரலட்சுமி விரதத்தின் பலன்கள்
 • வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
 • செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
 • சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
வரலட்சுமி பூஜையின் போது செய்யக் கூடாதவை
 • யாரையும் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. ஏனெனில் இந்த பூஜையானது எல்லாரும் மனசார வேண்டி வழிபடுவது முக்கியம்.
 • இந்த பூஜையை புதிதாக ஆரம்பிக்க போறீங்கள் என்றால் இதை பற்றி தெரிந்தவர்களிடம் அதன் முறைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும்.
 • இந்த பூஜையானது சுமங்கலி பெண்கள் செய்யக் கூடிய பூஜை. கல்யாணம் ஆகாத பெண்கள் அவர்கள் அம்மாக்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு வழிபடலாம்.
 • அமங்களமான நிகழ்ச்சிகள் நடந்து இருந்தால் இந்த பூஜையை 22 நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்