கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் 40 ஆண்டுகள் கழித்து குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு பார்வைக்கு காட்சியளித்தார்.
இக்கோவிலில் விசேஷம் என்னவென்றால் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இக்கோவிலில் இந்த அத்திவரதருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது விசேஷ சிறப்பு.
இன்னும் அத்திவரதர் பெருமாளின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்
அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள். அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். அத்திவரதர் உடல் முழுவதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் மிக நீண்ட உருவம் கொண்டவர்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் திருக்கச்சி என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. இக்கோவில் சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைத்து வழிபடுவார்கள்.
அத்திவரதர் 48 நாட்கள் பொது மக்களுக்கு காட்சி அளிப்பார். முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவார்.
இக்கோயிலில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோவில் சிறப்பு என்னவென்றால் இக்கோவில் உள்ள அத்தி வரதர் மற்றும் தங்க பல்லியும்தான்.
இங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணீருக்கு அடியில்தான் இருப்பார்.
இந்த குளத்தின் அதிசயம் என்னவென்றால் அந்த குளத்தில் எப்போதும் நீர் வற்றிப்போகாது.
அந்த குளத்தில் வீற்றிருக்கும் பெருமாள் யார் கண்ணிலும் அகப்படமாட்டார்.
அத்திவரதர் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினாராம்.
பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.
அந்த குளத்தின் ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றிப்போகாது. எனவே அக்குளத்தில் உள்ள நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்களாம். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு, 10 நாட்கள் கண் குளிர தரிசனம் செய்யலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் அத்திவரதர் மூழ்கடிக்கப் பட்டுவிடுவாராம்.
1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.