கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையா? இதிலிருந்து தப்பிக்க இந்தவொரு பொருளை தலையை சுற்றி போட்டாலே போதும்

Report Print Kavitha in ஆன்மீகம்

இன்று பலரும் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் பணப்பிரச்சினை. இதனால் பல இடங்களில் கடன் வாங்கி அதனை திருப்பி கொடுக்க முடியாது பலரும் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கேதுவினால் பிரச்சனைகள் இருந்தாலும், கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இதுபோன்ற கடன்பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஆன்மீகத்தில் சில பரிகாரங்கள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

கழுத்தை நெறிக்கும் கடன்

  • ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பொழுதில் கடைக்குச் சென்று கொள்ளு தானியத்தை வாங்கிவந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • அதன்பின் ஞாயிற்றுக்கிழமை வரும் எமகண்ட நேரத்தில் இந்த கொள்ளு தானியத்தை ஒரு சிவப்பு துணியில் வைத்து மூட்டையாக கட்டி, உங்களது தலையை ஒன்பது முறை சுற்றி தூக்கி தூர எறிந்துவிட வேண்டும்.

  • இதே போல் 11 வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் எமகண்ட நேரத்தில் தவறாமல் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள்.

கடன் பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள்

  • கஸ்தூரி மஞ்சளை எடுத்து தடவிக் கொள்ள வேண்டும். அதாவது, குளித்த பின்பு, வீட்டில் தீபம் ஏற்றி பூஜை எல்லாம் முடிந்த பின்பு, வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள்.

  • கிளம்பும் போது, தண்ணீர் ஊற்றி குழைத்து வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சளை ஒரு சொட்டு, எடுத்து உங்க கையில் வைத்து இரண்டு கைகளையும் தேய்த்துக் கொள்ளுங்கள்.

  • இப்படியாக உங்களது உள்ளங்கைகளில் கஸ்தூரிமஞ்சள் இருந்தால், மேலும் மேலும் உங்களுக்கு கடன் பிரச்சனை வராமல் இருக்கும்.

கடன் சுமை குறைய

  • சூரிய பகவானை நினைத்து கொண்டு, ஒரு கைப்பிடி அளவு கோதுமையை, ஒரு சிவப்புத் துணியில் வைத்து முடிச்சு போட்டு தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

  • 11 நாட்கள் கழித்து அந்த கோதுமையை பறவைகளுக்கு தானியமாக போட்டால், உங்களைப் பிடித்து இருக்கும் கெட்ட தோஷங்கள் அனைத்து நீங்கி, தீராத கஷ்டங்களுக்கும் நிரந்தரமான தீர்வை அந்த சூரிய பகவானை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

  • இதோடு சேர்த்து காலை 6 மணிக்கு சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்