பெற்ற பிள்ளையை அநாதையாக்கிய தாய்; தகுந்த பாடம் கற்பித்த நாய்!

Report Print Thayalan Thayalan in இலங்கை
பெற்ற பிள்ளையை அநாதையாக்கிய தாய்; தகுந்த பாடம் கற்பித்த நாய்!
391Shares
391Shares
ibctamil.com

பெற்ற பிள்ளையை அநாதரவான நிலையில் கைவிட்டுச் சென்ற பல்கலைக்கழக மாணவியொருவர், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைவிடப்பட்ட குறித்த குழந்தையை நாய் ஒன்று பாதுகாத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

முறையற்ற ரீதியில் கர்ப்பமான குறித்த மாணவி கர்ப்ப காலத்தில் பிறிதோர் இடத்தில் வசித்து வந்துள்ளார். குழந்தை பிறந்ததும் அவ்விடத்திலிருந்து நீங்கிச் சென்றுள்ளார்.

ஆனால் செல்லும் போது தான் பெற்ற குழந்தையை மருந்தகம் ஒன்றுக்கு அருகில் இரவு நேரம் கைவிட்டுச் சென்றுள்ளார்.

குழந்தையை மீட்ட பொலிஸார் குறித்த மாணவியைத் தேடி வந்த நிலையில் பொலநறுவையில் வைத்துக் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணைகளின் பின் அவரை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் தற்பொழுதும் சிகிச்சை பெற்று வரும் குறித்த குழந்தை, குறித்த மாணவியினுடையது என்பது DNA சோதனைகளின்மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவியால் கைவிடபட்ட குழந்தையைச் சுற்றப்பட்டிருந்த துணியில் நாய் ஒன்றின் பாத தடங்கள் காணப்பட்டுள்ளன.

குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நாய் பாதுகாத்தமை தொடர்பில் ஆச்சரியமடைந்ததாக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி, தான் தங்கியிருந்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பைப் பேணி வந்ததாகவும், தனது கர்ப்ப காலத்தை பெற்றோரிடம் மறைத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதோடு, குழந்தை பெற்ற விடயம் வீட்டில் தெரிய வந்தால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்பதாலேயே குறித்த குழந்தையைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த குழந்தையைப் பார்ப்பதற்கு பொலிஸார் அழைத்த போது அவர் அதனை அடியோடு மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்