ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டம்

Report Print Suman Suman in இலங்கை

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமயில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளீர் விவவகார அமைச்சு. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, சமூக வலுட்டல் நலன்புரி அமைச்சு, கல்வி அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பாராளுமன்ற மறு சீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த சிறுவர்களை பாதுகாக்கும் தேசிய நிகழ்வினை மேற்கொள்கின்றனர்.

இன்றைய இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, வடக்கு மாகாண முதலமைச்சர், சிவி. விக்கினேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே,சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, பிரதி அமைச்சர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வடக்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், விவசாய அமைச்சர் சிவநேசன், சுகாதார அமைச்சர் குணசீலன், கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers