இலங்கையில் பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் விளம்பரம்: கொதிக்கும் நெட்டிசன்கள்

Report Print Santhan in இலங்கை
221Shares
221Shares
ibctamil.com

இலங்கையில் ஜிம் ஒன்று பெண்களை பேரலுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்தது பலரிடைய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள OSMO என்ற ஜிம், பெண்களை பேரலுடன் ஒப்பிட்டு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் இது பெண்களுக்கான வடிவம் இது இல்லை என குறிப்பிட்டிருந்தது.

பாலியல் ரீதியாக இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டதற்கு, சமூகவலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அதில் #BoycottOsmo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஓஸ்மோ ஜிம்மை புறக்கணிப்போம் என குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் துணை பொருளாதார துறை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா, குறித்த விளம்பர பலகையை நீக்க கொழும்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, பெண்களை அவமானப்படுத்தும் நோக்கி அந்த விளம்பரப்பலகை அமைக்கவில்லை என்று அந்த ஜிம் நிர்வாகம தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய அந்த விளம்பரம் பலகையை உடனடியாக நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்