இலங்கை பெண் சுசானா சொன்னது பொய்யா? எங்கள் வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி

Report Print Santhan in இலங்கை
947Shares
947Shares
ibctamil.com

எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி கூறியுள்ளார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கு பெற்ற எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஆர்யா ஒருவரைத் தான் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் சில காரணங்களுக்காக அந்த பெண்களில் யாரையும் திருமணம் செய்யவில்லை.

இதையடுத்து குறித்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் சுசானா ஒரு பேஸ்புக் லைவ் செய்தார்.

அப்போது அவரிடம் ஒருவர் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டா என்று கேட்டார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருந்தார்.

இது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி என்ற பெண் பிரபல தனியார் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அதில், அவர் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டும் கிடையாது மன்னாங்கட்டியும் கிடையாது. இது அவரவருடைய மனதிற்கு தெரியும் என்றும், ஸ்கிரிப்ட் என்றால் என்னால் சரியாகவே பேச முடியாது, அப்படி இது மட்டும் உண்மை என்றால் என் தலைமுடியை வெட்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்