தூத்துக்குடியில் சுட்டு கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்: இலங்கையில் குரல் கொடுத்த தமிழர்கள்

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய பேரணி, கலவரமாக மாறியதால், பொலிசார் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் சிலர் மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளில் தமிழ அரசு இறங்கியுள்ளதாகவும், இனிமேல் அது இயங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகமோ தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. இங்கு தான் எங்கள் ஆலை இருக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதையடுத்து 13 உயிர்களை பறித்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கைகளில் பாதைகளை ஏந்திக் கொண்டு, தமிழக அரசு மற்றும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான முழக்கங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பை சேந்தவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், 17 வயது இளம்பெண் உள்பட 13 பேர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு தங்களது எதிர்ப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் பதிவு செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...