இந்தியா-இலங்கைப் பற்றிய முக்கிய தகவல்களை அழித்த பிரித்தானியா ஆவணக் காப்பகம்: அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இலங்கை
217Shares
217Shares
lankasrimarket.com

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரமாக இயங்கிய போது, இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே இருந்த ராஜீரிதியிலான உறவுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை பிரித்தானியா அரசு அழித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1978-இலிருந்து 80 வரையிலான காலகட்டத்தில் இரு நாடுகளும் எத்தகைய நிலைப்பாடுகளுடன் செயல்பட்டன? என்பது குறித்த ஆவணங்கள் அந்நாட்டு காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

அந்த காலகட்டத்தில்தான் இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தத் தருணத்தில் பிரித்தானியாவின் உளவு விமானப் படையும், உளவுத் துறையும் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டன.

குறிப்பாக, இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு பயிற்சிகளை பிரித்தானியா அளித்தது.

ஒருபுறம் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்த வேளையும், அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அப்போது பிரித்தானியா எடுத்ததாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான ஆவணங்கள், முக்கியப் பதிவுகள் ஆகியவை பிரித்தானியாவின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பத்திரிகையாளரும், ஆராய்ச்சியாளருமான பில் மில்லர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதுதொடர்பான விவரங்களைக் கேட்டிருந்தார். அப்போதுதான், அந்த ஆவணங்கள் அனைத்தும் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விளக்கமளித்த பிரித்தானியா வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், தேவைக்கு அதிகமாக உள்ள சில ஆவணங்களை அழிப்பது என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்று தெரிவித்துள்ளது.

அதன்படி 195 ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அவற்றில் இந்தியா - இலங்கை இடையேயான தொடர்புகள் குறித்த இரு ஆவணங்களும் அடக்கம்.

- Dina Mani

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்