பிரபாகரன் இறந்துகிடந்த போது நான் மிகுந்த வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி

Report Print Vijay Amburore in இலங்கை

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி கொண்டு வந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களால், ஏராளமான சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிந்த மக்கள் கிராமங்களுக்கே திரும்பி விட்டதாகவும், மோடி அரசின் செயல்களால் இளைஞர்கள் பலரும் வேலையின்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஓரு சில விஷயங்கள் அதிக கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டமக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

அவர்களுக்கான எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செய்லபடுத்தப்படவில்லை. அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் ராஜீவகாந்தி கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய ராகுல், என் தந்தையைக் கொன்ற ஒரு மனிதன் இலங்கையில் ஒரு வயலில் இறந்து கிடந்ததை நான் கண்டபோது, ​​அதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவரது பிள்ளைகள் அழுவதை பார்த்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அடுத்த வருடம் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தற்போதிலிருந்தே மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தில் இருகட்சிகளுக்கும் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாததால், தமிழகத்தை குறித்து வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்