ஏன்டா பொறம்போக்கு நாயே! இலங்கை அகதிக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in இலங்கை

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் அகதியை பொலிசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகதி முகாம்கள் கியூ பிராஞ்ச் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால்,அகதிகளைத் தவிர வெளிநபர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நாகியம்பட்டி முகாமில் வசிக்கும் ஜான் என்பவரின் வீட்டில் தங்கி உள்ளனர்.

அவர்கள் தங்கியிருப்பது தொடர்பாக முகாமைச் சேர்ந்த சிமியோன் (68) என்பவருக்கும், சுபாஷ்கரன் (58) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து சிமியோன் அளித்த தகவலின்பேரில் தம்மம்பட்டி பொலிசார் அந்த முகாமுக்கு விரைந்தனர். அப்போது பொலிசிடம் சுபாஷ்கரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த பொலிசார், திடீரென்று சுபாஷ்கரனை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காயம் அடைந்த சுபாஷ்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சுபாஷ்கரன் கூறியதாவது, இரண்டு பேர், நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள நாகராஜா என்கிற ஜான் வீட்டில் மூன்று மாதமாக தங்கி உள்ளனர்.

எங்கள் முகாமில் வசிக்கும் சிமியோன் அங்கிள் என்பவர், கடலூர் வாலிபர்கள் இருவரையும் பார்த்து, 'நீங்கள் என்ன தீவிரவாதிகளா? நீங்கள் யார்? ஏதோ பெண்கள் விவகாரத்தில் தப்பு செய்துட்டு இங்கே வந்து ஒளிந்திருக்கிறீர்கள்' என்று சொன்னார்.

இதையறிந்த நான் சிமியோன் அங்கிளிடம் சென்று, நீங்கள் ஏன் அவர்களை மிரட்டுகிறீர்கள். போலீசுக்கு தகவல் சொன்னால் அவர்கள் வந்து பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னேன்.

உடனே அவர், நீ யார் அதைக் கேட்க? என்று சொல்லி என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பதிலுக்கு நானும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினேன்.

இதுபற்றி தகவல் தெரிந்த தம்மம்பட்டி பொலிசார் அங்கே வந்தனர். அவர்கள் வந்த வேகத்தில் என்னிடம் என்ன ஏது என்றுகூட விசாரிக்காமலேயே சரமாரியாக அடிக்கத் தொடங்கி விட்டனர். ஃபைபர் லத்தியால் அடித்தனர்.

மூன்று பொலிசார் என்னை தாக்கினர். அப்போது அவர்கள், 'ஏன்டா பொறம்போக்கு நாயே. எங்களிடம் பிச்சை எடுக்கற அகதி நாயே...அடிச்சே சாகடிச்சிடுவோம்,' என்று சொல்லி அடித்தனர். பின்னர் சிமியோன் அங்கிள், 'நாங்கள் ஒற்றுமையாக செல்கிறோம்' என்று எழுதிக் கொடுத்தார்.

அதில் என்னிடமும் பொலிசார் கையெழுத்து வாங்கிக்கொண்டு நேற்று இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

பொலிசார் தாக்கியதில் என்னால் மூச்செடுக்க முடியவில்லை. நெஞ்சுவலியும் வந்தது. அதன்பிறகு என் நண்பர் சோலை செல்வம் என்பவர், என்னை இன்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்,'' என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் செல்வம், ராஜலிங்கம், சசிகுமார் ஆகியோரும் சுபாஷ்கரனை மருத்துவமனையில் சேர்த்ததில் முக்கிய பங்காற்றியதாகச் சொன்னார்கள்.

அகதியை தாக்கிய பொலிசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வா.க. மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers