இலங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! இப்படி ஒரு தண்டனையா என சோகம்

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு 3 மாத சிறைதண்டனையும், தலா ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 18.008.2018-ஆம் திகதி தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க எட்டு தமிழக மீனவர்கள் சென்றனர்.

அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பீடித்த காரணத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து மீனவர்கள் 8 பேரையும் புத்தளம் சிறையில் அடைத்தது இலங்கை அரசு. இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers