ஆளும் கூட்டணியில் பிளவு: இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுக் கொண்டார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்களை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியான அவர் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சிறிசேனா முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அந்நாட்டின் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, அரசில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான மகிந்த அமரவீர வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தார்.

இதுகுறித்து சபாநாயகர் கருஜய சூரியாவிடம் எழுத்து மூலமாக கொடுத்து விட்டதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை சரி செய்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியாக ராஜபக்சேவை பிரதமராக்க இலங்கை அதிபர் சிறிசேனா முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers