மகிந்த- ரணில் டுவிட்டர் தளத்தால் இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பம்

Report Print Deepthi Deepthi in இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 42(4) பிரிவுக்கு அமைய இலங்கை பிரதமராக உங்களிடம் இருந்த அதிகாரங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உங்களை விலக்கிக் கொள்கின்றேன் என இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று ரணில் விக்கிரமசிங்கவேவிற்கு இலங்கை அதிபர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரணில், தானே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 19வது அரசியல் அமைப்பின் திருத்தத்தின் 49வது பிரிவின்படி தான் பிரதமராக தொடர்ந்து நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கவே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வரை, இரு தரப்பினரும் தாங்கள்தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சரான ரவூப் ஹக்கீம் பேசுகையில், இத்தகைய மாற்றம் நீடிக்க வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யும் சக்தி எங்கள் கட்சிக்கும் உள்ளது" என தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக தனது கட்சி நிர்வாகிகளை அழைத்திருப்பதாகவும், அதற்காக உடனடியாக நாடு திரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை வெற்றி பெற வைப்பதில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ரணிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.இதனை கருத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி முடிவெடுத்திருக்கிறார் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers