மகிந்த பதவியேற்பு விவகாரத்தில் நக்கல் செய்த தமிழன் பிரசன்னா: தமிழின துரோகி என கருணாநிதியை சாடும் நெட்டிசன்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது குறித்து திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

ராஜபக்ச பதவியேற்பு தொடர்பாக கருத்துப் போட்ட அவர் அதில் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை இழுத்துள்ளார்.

அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... என்று தனது டுவிட்டில் போட்டுள்ளார் தமிழன் பிரசன்னா.

இதனால் பலரும் கொந்தளித்து தமிழன் பிரசன்னாவுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவையும் இதில் இழுத்து கடுமையாக சாடி வருகின்றனர்.

இவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால், மறைந்துபோன திமுக தலைவர் கருணாநிதியையும் இணைத்து, ஸ்டாலின், கனிமொழி என ஒட்டுமொத்த கட்சியையும் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த தமிழின துரோகி #திமுக-காங்கிரஸ் கூட்டாளியான மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமானார் .

தன் கூட்டாளியான ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவிப்பாரா? என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்