மந்திர சக்தியால் கட்டுப்படுத்துகிறேன்: சுற்றுலா பயணியை மிதித்து கொன்ற யானை

Report Print Gokulan Gokulan in இலங்கை

இலங்கையில் உள்ள தேசிய பூங்காவில் மந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்துவதாக கூறிய நபரை யானை மிதித்து கொன்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில், இந்திய பெருங்கடலுக்கு அருகில் யாலா என்ற தேசிய பூங்கா அமைந்துள்ளது. இதில் அனைத்து வகையான காட்டு விலங்குகளும் உள்ளன.

மேலும் காட்டு விலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்பதற்காக வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றனர். மேலும், பூங்கா நிர்வாகம் பயணிகள் வாகனைத்தை விட்டு இறங்க அனுமதிப்பதும் இல்லை

இந்நிலையில் அவ்வாறு வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் குடித்துவிட்டு, தான் காட்டு யானையை மந்திர சக்தியால் கட்டுபடுத்துவதாக கூறி, இறங்கி அதன் அருகில் சென்றுள்ளார்.

பின், அதனிடம் கைகளை உயர்த்தி காண்பித்துள்ளார். இதை பார்த்த யானை கோவம் கொண்டு அவரை பலமாக மிதித்ததில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

சுற்றுலாவாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers