முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்து தமிழ் பெண்

Report Print Kavitha in இலங்கை

முதன் முறையாக இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை சேர்ந்த லண்டனில் வாழ் தமிழ் பெண்ணான சியோபன் ஞானகுலேந்திரன் என்ற பெண் நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்று வந்துள்ளார்.

குறித்த பெண்மணி செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் இவர் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

மேலும் சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...